• Mon. Jan 20th, 2025

மழையே பெய்யாத விநோத கிராமம்

Byவிஷா

Jun 18, 2024

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அதிகமாகவோ, குறைவாகவோ மழை பெய்து வரும் நிலையில், மழையே பெய்யாமல் ஒரு ஊர் இருக்கிறது. அந்தக் கிராமத்தில் எப்படித்தான் மனிதர்கள் வாழ்கிறோர்களோ என்ற அச்சத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. ஒரு சொட்டு மழை கூட பெய்யாமல் இருக்கும் அந்த கிராமத்தைப் பற்றித்தான் இங்கு பார்க்க இருக்கிறோம்.
ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் தான் அல்ஹ{தீப் என்ற இந்த கிராமம் உள்ளது. இந்த கிராமம் தரை மட்டத்தில் இருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. இந்த கிராமம் உயரமாக இருந்தாலும் இந்த இடம் வறட்சியுடன் தான் காணப்படுகிறது. உலகம் முழுவதும் வருடத்தின் வெவ்வேறு நேரங்களில் மழை பெய்கிறது. ஆனால், அல்ஹ{தீப் கிராமம் எப்போதும் வறண்டு தான் கிடக்கிறது. இங்கு எப்போதும் மழை பெய்யாததால், வானிலை மிகவும் வறண்டு காணப்படும். பகலில் அதிகப்படியான வெப்பமும் இரவில் உறைபனி குளிரும் நிலவுகிறது. மீண்டும் காலை சூரியன் உதிக்கும்போது வானிலை வெப்பமடைகிறது.

ஆனால், இந்த கிராமத்தில் ஏன் மழை பெய்வதில்லை என்ற கேள்வி எழும். அதற்கு காரணம், ஏமனின் இந்த பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும் மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளது தான் காரணம். அதன் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன. அல் {ஹதைப் கிராமத்தின் இடம் சமவெளியில் இருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ளது. சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீட்டருக்குள் குவியும். எனவே, அல்-ஹதைபின் மீது மேகங்கள் குவிவதில்லை. மேலும், மேகங்கள் இல்லாவிட்டால் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதனால் தான் இங்கு மழைக்கான வாய்ப்பே இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.