• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தர்காவிற்கு காய்கள் கொண்டு சென்றவரை போலீஸ் நிறுத்தி உள்ளதால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Sep 24, 2026

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் அவுலியா தர்கா உள்ளது இந்த தர்காவில் தங்கி உள்ள அக்தர்கள் (பூசாரி)கள் ஏழு நாளுக்கு ஒரு முறை மாறுவது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக இந்த வாரத்திற்கான முறைதாரர் அத்தார் அப்பாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சமைத்து சாப்பிடுவதற்காக மலை மீது தக்காளி அரிசி வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்ற பலசரக்கு பொருட்களை கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது மலைக்கு செல்லும் பாதையில் பாதுகாப்பில் உள்ள காவல்துறையினர் மேலே கொண்டு செல்லக்கூடாது என தர்கா நிர்வாகியை தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இதனால் கோபம் அடைந்த இஸ்லாமியர்கள் தொடர்ந்து தங்களின் வழிபாட உரிமையை பறிப்பதாகவும், இதனால் மழை மீது உள்ள தர்காவின் சாவியை காவல் நிலையத்தில் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.