• Fri. Sep 25th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..,

Byமுகமதி

Sep 24, 2026

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்தில் 22 ஆம் தேதி ஐந்து மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்ததில் பணம் ஏதும் கைப்பற்ற படவில்லை.

ஆனால் அங்கிருந்த அதிகாரிகளிடம் போன்பே, ஜீபே பணப் பரிவர்த்தனையில் 32.000 ஆயிரம் ரூபாய் பிறரிடமிருந்து பெற்றது தெரியவந்தது. தமிழ்நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் ஆய்வு செய்ததில் பல நகராட்சிகளில் இலட்சக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கணக்கில் வராத பணம் இருந்து பறிமுதல் செய்து பழக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அறந்தாங்கியில் ரொக்கமாக பணம் பிடிபடாமல் ஜிபி மூலம் பணம் பெற்று இருந்ததை கண்டுபிடித்ததால் இது குறித்து பதில் அளிக்க நகராட்சி அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திடீர் சோதனையால் அறந்தாங்கியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டது.