எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் தேசிய பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஆயிஷா மஹாலில் நடைபெற்றது.

இதில் எஸ்டிபிஐ கட்சியின், தேசிய தலைவர் எம் கே பைஃஜி மற்றும் மாநிலத் தலைவர் உமர் பாரூக், விமன் இந்தியா மூவ்மெண்ட் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள், எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொது செயலாளர்கள் அப்துல் மஜீத் பைஸி, மற்றும் சகோதரி யாஸ்மீன் பரூக்கி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரையாற்றினர்.
கூட்டத்தில், பெண்களின் உரிமைகள், சமூக முன்னேற்றம் மற்றும் பெண்களின் அரசியல் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் புதிய தேசிய நிர்வாகிகள் ழேர்வில்,, கர்நாடகாவைச் சேர்ந்த சாதியா செயிதா தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தேசியத் துணைத் தலைவர்களாக கேரளாவைச் சேர்ந்த கே. ரைஹானத், குஜராத்தைச் சேர்ந்த கும் கும் பென் ஆகியோரும், தேசியப் பொதுச்செயலாளர்களாக கர்நாடகாவைச் சேர்ந்த நஸ்ரியா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரூனா லைலா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

தேசியச் செயலாளர்களாக கர்நாடகாவைச் சேர்ந்த நசீமா சூரஜ், பீகாரைச் சேர்ந்த ராக்கி குமாரி, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாத்திமா கனி, கேரளாவைச் சேர்ந்த சுளைகா ரசீது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேசியப் பொருளாளராக ராஜஸ்தானைச் சேர்ந்த பரிதா செய்யத் தேர்வு செய்யப்பட்டார்.


