புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஹாக்கி உலகக் கோப்பை இயற்கை வளங்கள் நலத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் விளையாட்டு வீரர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்

தமிழகத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற உள்ள ஹாக்கி உலகக் கோப்பை காண போட்டிகள் சென்னை மதுரையில் நடைபெற உள்ளது. முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நிலையில் ஹாக்கி உலகக் கோப்பையை தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. என்ன நிலையில் புதுக்கோட்டையில் இன்று காலை கொண்டுவரப்பட்ட ஹாக்கிஉலகக் கோப்பையை மாவட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள் ஊர்வலமாக மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு கொண்டு வந்தனர்.

மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இயற்கை வளங்கள் நலத்துறை அமைச்சர் ரகுபதி மாவட்ட ஆட்சியர் அருணா சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து உலக கோப்பையுடன் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நடனமாடி உற்சாகத்துடன் வரவேற்றனர்.







; ?>)
; ?>)
; ?>)