• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மீண்டும் அமைச்சராக திருத்தணியில் ரோஜா சிறப்பு பிரார்த்தனை

Byவிஷா

Apr 20, 2024

திருத்தணி அருள்மிகு முருகன் திருக்கோவிலில், நடிகை ரோஜா மீண்டும் அமைச்சராக வேண்டும் முருகா’ என சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் மற்றும் மலர் மாலைகள் வழங்கப்பட்டன.
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் சார்பில் மீண்டும் நகரி தொகுதியில் ரோஜா போட்டியிடுகிறார். இன்று அந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதனை முன்னிட்டு வேட்பு மனுவை திருத்தணி முருகன் கோயில் மூலவர் முருகப்பெருமான் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தும் மற்றும் திருத்தணி முருகன் கோயிலில் உபயோகிலான செல்வ விநாயகர் திருக்கோயிலிலும் வேட்பு மனுவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அமைச்சர் ரோஜா எடுத்துச் சென்றார்.