கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலணியில் வசிப்பவர் ரூபக் (வயது 28). ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை 4 தலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடம் பொது இடம் என ஊராட்சி சார்பில் தெரிவித்ததால், அவர்கள் நீதிமன்றம் சென்று அந்த நிலம் இவர்களுக்கு சொந்தமானது என தீர்ப்பும் வந்துள்ளது. அது தொடர்பாக மேல் முறையீடும் செய்யப்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அப்பகுதி கடந்த 17.02.2025 அன்று காலை 10.30 மணியளவில் அவரது தந்தை தனிப்பட்ட முறையில் வாங்கிய சொத்தினை சுற்றி வேலி மற்றும் மரங்களை வழக்கில் சம்மந்தமில்லாத இடத்தை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பொக்ளின் இயந்திரம் மூலம் சேதப்படுத்தியுள்ளனர்.
அப்போது, இவரது தாய், தந்தையையும் தாக்கியுள்ளனர். முன் அறிவிப்பு இல்லாமல் தாங்கள் வழிபட்டு வந்த கோவிலை சேதப்படுத்தி கம்பி வேலி போட்ட செயல் அலுவலர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீதும், தன் தந்தை சாமியாடும் உரிமையை பறித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ வீரர் சீருடையில், குடும்பத்துடன் வந்து மனு அளித்தார்.
நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கழிப்பறை கட்டுமானப் பணியினை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.