• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தூர்வாரப்படாத கால்வாய் சீரமைக்கும் சமூக ஆர்வலர்

ByP.Thangapandi

Oct 19, 2024

உசிலம்பட்டி அருகே 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத கால்வாய் தனி ஒருவராக தூர்வாரி சீரமைக்கும் சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது – குடிநீர் தேவைக்காவது இந்த கால்வாயில் தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து 5 ஆம் எண் கிளைக் கால்வாய் மூலம் கருமாத்தூர், செட்டிகுளம், பூச்சம்பட்டி, மாயன் குரும்பன்பட்டி, வளையன்குளம் உள்ளிட்ட 5 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது இந்த கண்மாய்கள் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பயன்பெரும் என கூறப்படுகிறது.

இந்த கிளை கால்வாய் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் புதர் மூடி காணப்பட்டதோடு, தண்ணீர் வரும் போது அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கண்மாய்களுக்கு நீர் செல்ல முடியாத நிலை நீடித்து வந்துள்ளது.

இந்த கால்வாயை தூர்வார அரசிடம் பலமுறை கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் தூர்வாரப்படாத சூழலில் வளையங்குளம் கண்மாய்க்கு அருகே உள்ள கேசவன்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்ற சமூக ஆர்வலர் தனது சொந்த செலவில் கால்வாயை தூர்வாரி வருகிறார்.

கிட்டாச்சி, ஜேசிபி இயந்திரம் கொண்டு கடந்த 3 நாட்களாக கிராம மக்கள் உதவியுடன் தூர்வாரி வருவதாகவும், மேலும் 3 நாட்களில் 5 கண்மாய்களுக்கு செல்லும் கிளைக் கால்வாயை தூர்வாரி முடித்து விடுவதாக தெரிவித்தனர்.

மேலும் திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது இந்த கிளை கால்வாயிலும் தண்ணீர் திறந்து 5 கண்மாய்களையும் குறைந்த அளவு நிரப்பி கொடுத்தாலே கால்நடைகளுக்கும், கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி ஆகும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.