• Mon. Apr 21st, 2025

மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை

BySeenu

Jan 14, 2025

மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை, புண்ணாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே சென்று தின்னும் சி.சி.டி.வி காட்சிகள்…

கோவை துடியலூர் அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள வரப்பாளையம் பிரிவு பகுதியில் உள்ள பாலு என்பவர் தோட்டத்தில் நேற்று இரவு ஒரு மணிக்கு புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு உள்ள மாட்டுத் தொழுவத்திற்குள் புகுந்தது. பின்னர் மாடுகளுக்கு வைத்து இருந்த தீவனங்களை தின்றுவிட்டு அங்கு வைத்து இருந்த புண்ணாக்கு மூட்டையை தூக்கிக் கொண்டு வெளியே வந்து தின்னும் வீடியோ அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்தக் கட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.