• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஓரங்கட்டப்பட்ட ஓபிஎஸ்-இனி எல்லாமே இபிஎஸ் தான்

ByA.Tamilselvan

Jul 11, 2022

ஓபிஎஸ் ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார்.பொதுச்செயலாளர்,பொருளாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களையும் தன் வசம் வசப்படுத்தி கொண்டுள்ளார் இபிஎஸ்.
இன்று காலை பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உயர்நீதிமன்றும் தீர்பு வழங்கியது. இந்நிலையில் அதிகமுக பொதுக்குழு கூட்டம் துவங்கி நடைபெற்றுவருகிறது. அதிமுகவின் இடைக்கால செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஓபிஎஸிடமிருந்து பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் பொதுச்செயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓட்டுமொத்தமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். மேலும் அதிமுக நிரந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த பொதுச்செயலாளராக இபிஎஸ் என்பது உறுதியாகிவிட்டது.