• Tue. Apr 30th, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் உறுதி

இந்தியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் இன்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

பேச்சுப்பறை பகுதியில் துவங்கிய பரப்புரையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார் திருவட்டாறு பகுதி வட்டாரத் தலைவர் வினுட்ராய் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேச்சிப்பாறை மணியங்குழி, திருநந்திக்கரை, திற்பரப்பு ,பொன்மனை, அரசமூடு, வேர் கிளம்பி ,சித்ராங்கோடு, திருவட்டாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிக்க வந்த கவேட்பாளர் விஜய் வசந்த் அவர்களுக்கு இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் சால்வை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் மேளதாளம் வழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பேசிய அவர்..,

கடந்த இரண்டரை ஆண்டுகள் உங்களுக்காக மக்கள் பணி செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுந்தீர்கள் அதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்களின் கவலைகளை அறிந்து எழுச்சிக்காகவும் வளர்ச்சிக்காகவும் எப்போதும் சிந்திக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சி மக்களின் நலன்சார்ந்த வாக்குறுதியை அறிவித்துள்ளது.

ஒவ்வொருவரின் கேள்விகளுக்கும் பதிலாக நமது காங்கிரஸ் பேரியக்கத்தின் தேர்தல் அறிக்கை இருக்கின்றது. 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய், படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், ஆண்டுதோறும் நிதி உதவி 100 நாள் வேலை வாய்ப்பு ஊதியம் 400 ருபாயாக உயர்த்தப்படும்.

விளையாட்டு வீரர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் புதிய ஜிஎஸ்டி 2.O திட்டம் உருவாக்கப்படும்

விவசாயிகளின் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க தனி சட்டம் இயற்றப்படும். மீனவர்களின் நலனுக்காக தனி கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்.

மாநிலங்களின் விருப்பத்திற்கு ஏற்ப நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும். மக்களின் உடல்நிலையை பேணிக் காக்கும் வகையில் மருத்துவ காப்பீட்டுத் தொகை 25 லட்சம் ரூபாய் ஆக உயர்த்தப்படும்.

இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை காக்க கூடிய வகையில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியை அளித்திருக்கின்றது. உங்கள் வாழ்க்கைத் தரம் மேம்பட கஷ்டங்கள் தீர நீங்கள் அனைவரும் இந்தியா கூட்டணிக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும்.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினராக உங்களுக்காக பணியாற்றுவதற்கு உங்களுடைய வாக்குகளை கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தளங்கள் நிறைந்த இயற்கை எழில் நிறைந்த மாவட்டம் நமது மாவட்டத்தை உலக தரம் வாய்ந்த சுற்றுலா தளமாக மாற்றுவேன்.

நமது பேச்சுப்பாறை பகுதியை அனைத்து வசதிகளுடன் கூடிய சிறந்த சுற்றுலா தளமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். நமது பகுதியில் ஏராளமான ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது. ரப்பர் விவசாயிகளின் நலனுக்காக ரப்பர் தொழிற்சாலை அமைக்கப்படும்.

இங்கே பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் உங்களிடம் வாக்கு கேட்டு வரும் பொழுது சமையல் எரிவாயு மானியம் வங்கி கணக்கில் போடுவேன் என்று சொன்னீர்களே என்ன ஆனது என கேளுங்கள். அதே போல் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என்று சொன்ன 15 லட்சம் ரூபாய் என்ன ஆனது 2 கோடி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு எங்கே? இந்து மாணவர்களுக்கான கல்வி கடனை பெற்று தருவேன் என்று சொன்னீர்களே? இது எல்லாம் என்ன ஆனது என்ற கேள்வியை அவர் முன் நீங்கள் வைக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக எந்த விதமான நலத்திட்டத்தையும் வளர்ச்சிக்கான திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஆகையால் பாஜகவினரால் அவர்கள் செய்த சாதனையை சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகையால் மக்கள் பணி செய்யும் எங்களை குறை சொல்வதையும், பொய்யான வாக்குறுதிகளையும் அழைத்து வாக்கு கேட்டு வருகின்றனர் அவர்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

இந்தியா கூட்டணி சார்பில் மத்தியில் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நல்லாட்சி அமைந்திட முதல் வெற்றியை கன்னியாகுமரியில் இருந்து வழங்க வேண்டும் அதற்கு நீங்கள் அனைவரும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *