• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஜெயலலிதா படத்துடன் பேரணி

அலங்கரிக்கப்பட்ட வண்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய தொண்டர்கள்.
.குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி, பள்ளிபாளையம் நகர ஒன்றிய பேரூர் கழகங்கள் சார்பாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்துடன் பள்ளிபாளையம் நகர முக்கிய வீதிகள் வழியாக ஆவரங்காடு, எம்ஜிஆர் சிலை வரை ஐந்து கிலோமீட்டர் மௌன ஊர்வலமும் எம்ஜிஆர் சிலை அருகில் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை இட்டு அஞ்சலி செலுத்தி மீண்டும் அதிமுக ஆட்சி மலர உறுதிமொழி எடுக்கப்பட்டது.


நிகழ்வில் நகர கழக செயலாளர் பி எஸ் வெள்ளிங்கிரி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ் செந்தில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பி குமரேசன் பேரூர் கழகச் செயலாளர்கள் செல்லதுரை ஜெகநாதன் பேரவை செயலாளர் டி கே சுப்பிரமணி பொதுக்குழு உறுப்பினர் திருமூர்த்தி நகரத் துணைச் செயலாளர் ஜெய்கணேஷ் நகரப் பொருளாளர் சிவகுமார் நகர இணை செயலாளர் மீரா வாசுதேவன் மாணவரணி தலைவர் ஆடிட்டர் ராஜா நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயா வைத்தி செந்தில் பெரியார் நகர் சரவணன் சம்பூரணம் சுஜாதா மாரிமுத்து சுரேஷ் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாசறை நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப பிரிவு டி. சுரேஷ் டி. சரவணன் மற்றும்சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.