• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திமுகவைச் சேர்ந்த செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByRadhakrishnan Thangaraj

Aug 12, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் குடிநீர் முறையாக வழங்காமல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்குவதாகவும் செட்டியார்பட்டி பேரூராட்சி தலைவராக இருக்கக்கூடிய திமுகவைச் சேர்ந்த ஜெயமுருகன் மற்றும் செட்டியார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் மோகன மாரியம்மா ஆகியோர் மீது பல குற்றசாட்டு எழுந்த வண்ணம் உள்ள நிலையில் இன்று செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்ச் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கணேஷ் குமார் தலைமையில் நகர செயலாளர் உறுப்பினர் கனகராஜ் கமிட்டி உறுப்பினர் மருது ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் மாவட்ட குழு உறுப்பினர் ராமர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு செட்டியார் பட்டி பேரூராட்சி நடைபெறும் ஊழல்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மக்களுக்கு செய்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

உடனடியாக செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியான ஆறாவது வார்டு பகுதியில் தாமிரபரணி குடிநீர் சீராக விநியோகம் செய்ய வலியுறுத்தியும் மயானத்திற்கு சாலை வசதி மற்றும் தண்ணீர் வசதி செய்து தர வலியுறுத்தியும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதில் முறைகேடு நடைபெறுவதை திருத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக சாஸ்தா கோயில் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நீர் கிணறு தோண்டியதின்மூலம் கூட்டுக் குடி தீர் வேண்டும் திட்டத்தில் பைப் பதிப்பதில் முறையீடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்து இந்த குடிநீர் திட்டத்தில் 7 கோடி 77 லட்ச ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும் இதை கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் இருப்பது கண்டிக்கத்தக்கது உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.