ரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எஸ்.ஐ தேர்வில் காவலர் ஒருவர் செல்போனில் பிட் அடித்த சம்பவம் தேர்வு மையத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மையத்தில் நடந்த ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வில் பங்கேற்க 340 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவர்களில் 140 பேர் தேர்வு எழுத பங்கேற்று இருந்தனர். இதில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் புருஷோத்தமன் (29) என்பவர் தனது செல்போனை மறைத்து வைத்து அதைப் பார்த்து காப்பியடித்து தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது.
தனது செல்போனைப் பயன்படுத்தி புருஷோத்தமன் காப்பிடித்துக் கொண்டிருந்ததை அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் மூலமாக கண்காணிப்பாளர்கள் கவனித்து, புருஷோத்தமனை தேர்வு அறையில் இருந்து உடனடியாக வெளியேற்றினர். இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் புகாரின்படி வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
எஸ்.ஐ தேர்வில் பிட் அடித்த காவலர்
