
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவரிடம் பாஜக கயத்தார் ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் தலைமையில், மாவட்ட துணை தலைவர் இராஜேந்திரன் கழுகுமலைக்கு அரசு கல்லூரி மற்றும் தொழிற்பயிற்சி பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் கழுகுமலை மட்டுமன்றி சுற்றியுள்ள சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் பயனடைவார்கள் என எடுத்துரைத்தார். அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை மனுவை வழங்கினார். அவர்களிடம் கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
அதற்கு பாஜகவினர் கழுகுமலையில் இடம் இல்லாததால் இங்கு வர வேண்டிய கல்லூரி மற்றும் யூனியன் அலுவலகம் என அனைத்தும் வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. கழுகுமலையில் கல்லூரி அமைக்காவிட்டாலும் சுற்றியுள்ள கிராமபுற பகுதிகளில் அரசு நினைத்தால் அமைக்கலாம் என கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கழுகாசலமூர்த்தி கோயிலில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு குளியல் வசதி, தங்கும் வசதிகள் செய்து தர கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் மற்றும் அலுவலகத்தில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் கூறினார். கலெக்டரும் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் மாவட்ட நெசவாளர் பிரிவு செயலாளர் மாரியப்பன், ஒன்றிய துணை தலைவர்கள் மதிஇராஜசேகரன், முத்துராமலிங்கம், விருந்தோம்பல் பிரிவு செயலாளர் சப்பாணிமுத்து,கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் மாடசாமி, சமூக ஊடக பிரிவு ஒன்றிய தலைவர் ,மாரிச்சாமி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் விஸ்வநாகராஜன், கிளை தலைவர்கள் ராஜேந்திரன், செந்தில்வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.