கேரள மாநில நிதியமைச்சர் பாலகோபால், மத்திய அரசு கூறியதுபோல பால், தயிர், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு கேரளாவில் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி ) விதிக்கப்படமாட்டாது என்று கூறியுள்ளார்.மாநில சட்டமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சாமானியர்களைப் பாதிக்கும் இந்த வரியை மாநில அரசு எதிர்ப்பதாக அமைச்சர் பாலகோபால் குறிப்பிட்டார். “இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நேரில் சென்றும் கடிதம் மூலமும் தகவல் தெரிவித்துள்ளோம். கேரள முதல்வரும் இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளார். “எனவே பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் உணவு தானியங்களுக்கான ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டியை கேரளாவில் அமல்படுத்தமாட்டோம்,’ என்று நிதியமைச்சர் பாலகோபால் கூறினார்.