• Mon. May 6th, 2024

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பெறப்பட்டது

ByI.Sekar

Mar 11, 2024

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 253 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 253 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
முன்னதாக, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், போடிநாயக்கனூர் வட்டம், மேலசொக்கநாதபுரத்தில் மின்சாரம் தாக்கி உரியிழநத கருப்புசாமி என்வரின் மனைவி அம்பிகாம்பாள் என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிதியிலிருந்து ரூ.1.00 இலட்சத்திற்கான காசோலையினையும், 2019-2020 ஆம் ஆண்டிற்கு சிறந்த பள்ளிச் சத்துணவு மையங்களுக்கான ISO தரச்சான்று பெற்ற ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இலட்சுமிபுரம், கம்மதர்ம துவக்கப்பள்ளி கோவிந்தநகரம், ஐ.கா.நி மேல்நிலைப்பள்ளி போடிநாயக்கனூர் ஆகிய 3 பள்ளிகளுக்கு ISO தரச்சான்றிதழினையும், விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்து பள்ளியில் பயிலும் 30 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.75,000/- மதிப்புள்ள பத்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
மேலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறும்பான்மையினர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 82 பயனாளிகளுக்கு தலா ரூ.5,634 மதிப்பிலான தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இந்துமதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *