• Fri. Dec 13th, 2024

கல், மண் குவாரியை தடுத்து நிறுத்த, விவசாயிகள் கோரிக்கை

ByI.Sekar

May 4, 2024

தேனி மாவட்டம், போடி தாலுகா, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் முத்து கோம்பையில் விதிமுறைகளை மறி விவசாய நிலத்தை அழித்து செயல் பட்டு வரும் கல், மண் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முத்து கோம்பை பகுதியில் வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலங்களை அழித்து விதி முறைகளை மீறி புதிதாக கல் குவாரி அமைக்கப்படுகிறது.

இந்த கல் குவாரியில் அதிக சத்தத்துடன் வெடிக்கூடிய வெடி மருந்து பயன்படுத்துவதால் வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்து, விவசாய நிலங்களுக்கு செல்ல தார் சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து வருகிறது.

எனவே விவசாயிகளுக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கல் குவாரியை தடுத்து நிறுத்தவில்லை என்றால் ஆபத்தும் ஏற்படும் என விவசாயிகள், பொது மக்கள் கோரிககை விடுத்து விடுத்து வருகின்றனர்.