• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆதார் மோசடிகளில் இருந்து தப்பிக்க புதிய வழி..!

Byவிஷா

Jan 8, 2024

ஆதார் மோசடிகளில் இருந்து தப்பிக்க தற்போது ‘மாஸ்க்டு ஆதார் கார்டு’ என்ற புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) 12-இலக்க தனித்துவ ஐடியான ஆதார், வங்கிக் கணக்கைத் திறப்பது அல்லது அரசாங்கத் திட்டத்தில் முதலீடு செய்வது உள்ளிட்ட பல செயல்பாடுகளை மேற்கொள்ள, இப்போது நாடு முழுவதும் முக்கிய ஆவணமாகப் பயன்படுத்தப்படுகிறது.
தனிப்பட்ட குறியீடு எவ்வளவு எளிது என்றாலும், இதை வைத்து மோசடிகள் மற்றும் தவறாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. இதன் காரணமாக UIDAI Masked Aadhaar எனும் மாஸ்க்டு ஆதார் கார்டை வழங்குகிறது.
“மாஸ்க்டு ஆதார் என்பது, நீங்கள் பதிவிறக்கிய டிஜிட்டல் ஆதாரில் உங்கள் ஆதார் எண்ணை மறைக்க அனுமதிக்கிறது. மாஸ்க்டு ஆதார் கார்டில், ஆதார் எண்ணின் முதல் எட்டு இலக்கங்களுக்குப் பதிலாக “xxxx-xxxx” போன்ற குறியீடுகள் இருக்கும். அதே நேரத்தில் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்கள் மட்டுமே தெரியும்.”
எண்கள் மறைக்கப்பட்ட ஆதார் அட்டையின் நகலைப் பயன்படுத்துவது சட்ட ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். எனவே, பயனர்கள் இதைப் பயன்படுத்தி தங்களின் தனியுரிமைத் தகவல்களைப் பாதுகாக்கலாம்.
“ஆதார் எண்ணைப் பகிர்வது அவசியமில்லாத இடங்களில் மாஸ்க்டு ஆதாரை eKYC – க்காகப் பயன்படுத்தலாம். இது உங்கள் ஆதாரின் கடைசி 4 இலக்கங்களை மட்டுமே காட்டுகிறது. https://eaadhaar.uidai.gov.in பக்கத்தில் இருந்து உங்கள் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் போது ‘மாஸ்க்டு ஆதார்’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.