கோவை மாவட்டம் மருதமலை வனப் பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40″வயது மதிக்கத்தக்க பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே தாயுடன் இருந்த மூன்று மாத குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வந்த நிலையில், அந்த குட்டி யானை தாயை பிரிந்து அதன் கூட்டத்துடன் சென்றது.
இதனை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானையை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது.
இதை தொடர்ந்து அங்கு சென்ற வனத் துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப் பகுதிக்கு கொண்டு வந்தனர். குட்டி யானையை தாயுடன் சேர்க்க பல கட்ட முயற்சிகள் தோல்வி மேற்கொண்ட வந்தனர் வனத் துறையினர்.
ஆனால் தற்போது வரை தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் குட்டி யானை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து, நாளை அதிகாலை யானைக் குட்டி சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக முதுமலை யானைகள் முகாமுக்கு மாற்றப்பட்டது என மாவட்ட வன அலுவலர் தெரிவித்து உள்ளார்.
