• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ராஜா தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம்..,

ByE.Sathyamurthy

Jun 15, 2025

சென்னை கீழ்கட்டளை. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்கட்டளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கீழ்கட்டளை பகுதி செயலாளர் சந்திரசேகர் ராஜா தலைமையில். இந்த செயல் வீரர்கள் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த செயல்வீரர்கள் கூட்டத்திற்கு ஆலோசனை.வழங்குவதற்காக. முன்னாள் அமைச்சர் சீதா செல்ல பாண்டியன் நாவலூர் முத்து செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னாள் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தனசிங் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் அமைச்சர். சீதா செல்ல பாண்டியன் பேசுகையில். இந்த திமுக ஆட்சி. மக்களுக்கு. பாதுகாப்பில்லை.

முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 2026 நம் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராக ஆக்க வேண்டும் என்று உறுதியாக நாம் பாடுபட வேண்டும் என்று. கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார். அதனைத் தொடர்ந்து புதியதாக கீழ்கட்டளை பகுதி செயலாளர் சந்திரசேகர் ராஜா பதிவேற்றதை தொடர்ந்து அவரை இந்த சிறு வயதிலேயே சிறப்பாக பணியாற்றியதற்காக தான் பகுதி செயலாளர் பணியாற்றிய பதவியில் அமைத்து உள்ளார்.

சந்திரசேகர் ராஜாவை வெகுவாக அனைவரும் பாராட்டினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மகளிர் அமைப்புகள் அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த சந்திர சேகர் ராஜாவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து மாலை அணிவித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி அவரை வாழ்த்தி சென்றனர்.