

மதுரை அரசு இராஜாஜி மருத்துவ கல்லூரியில் பொது மருத்துவ துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து துறை தலைவராக பணி புரிந்தும் ஓய்வு பெறும் பேராசிரியர் நடராஜன் க்கு பணி நிறைவு பாராட்டு விழா மதுரை அரசு இராசாசி மருத்துவ கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நிகழ்ச்சி செயலாளர் மருத்துவர்/ பேராசிரியர் செந்தில், நிகழ்ச்சி தலைவர் டேவிட்பிரதிப்குமார், மருத்துவ கல்லூரி டீன் அருள்சுந்தரேஷ்குமார்,துணை முதல்வர் மல்லிகா,மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், பொருளாளர் பீர் முகமது மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


