• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கவிருக்கும் அட்டகாசமான பிறந்தநாள் பரிசு!

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘அயலான்’. இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. வேற்றுகிரக வாசி பூமிக்கு வருவதை வைத்து இப்படம் உருவாகிறது. இயக்குனர் ரவிக்குமாரின் முந்தைய படமான ‘இன்று நேற்று நாளை’ படமும் அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்த கதையம்சம் கொண்டதாக இருந்தது. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு ‘அயலான்’ என்று கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஹாலிவுட் படங்களுக்கு பயன்படுத்தப்படும் கேமரா முதன்முறையாக இந்த படத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் தாமதமாகி கடந்த ஆண்டு நிறைவடைந்ததாக அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் ஒரு மைல் கல்லாகவும், குழந்தைகள் விரும்பும் வகையிலும் அமையும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் போஸ்டர் மற்றும் ‘வேற லெவல் சகோ’ என்ற பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது, குறிப்பிடத்தக்கது!

இப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்த படத்தின் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி -17ம் தேதி வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.