• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வால்பாறை சாலையில் உலாவும் ஒற்றை புலி

Byadmin

Jan 31, 2022

ஆனைமலை புலிகள் காப்பகம் 956சதுர கிலோமீட்டர் உள்ளடக்கிய வனச்சரக பகுதிகள் வால்பாறை,மானாம்பள்ளி, உலாந்தி,பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி ஆறு வனசரகமும் வெளி மண்டலம் கொடைக்கானல் பகுதியும் உள்ளது, இங்கு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு,புலி,புள்ளிமான், வரையாடுமற்றும் இருவாட்சி அபூர்வ பறவையினங்கள்,தாவரங்கள் நிறைந்த உள்ளது. இன்று காலையில் வால்பாறை காரில் சென்ற சுற்றுலாப்பயணிகள் வால்பாறை கவர்கல் அருகே உள்ள ஊமையாண்டி முடக்கு சாலையில் புலி நடந்து வந்ததை கண்டனர். இதனை அங்கிருந்த சுற்றுலா பயணி தனது மொபைல் போனில் படமெடுக்க புலி சாலையில் நடந்து சென்று வனப்பகுதிக்குள் செல்லும் வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.