இலங்கையை சேர்ந்த லண்டன் வாழ் தொழிலதிபர் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின கொண்டாட்டம். தேசிய கொடி கலரில் இனிப்புகள், ஜுஸ் போன்றவை வழங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு 2 லட்ச ரூபாய் மதிப்பில் நலதிட்ட உதவி வழங்கினார்.
இலங்கை பூர்வீகமாகக் கொண்டவர் பத்ம குமார். தற்போது லண்டனில் வசிக்கும் தொழிலதிபர் பத்மகுமார்.
இவர் சென்னை, மதுரை போன்ற இடங்களில் ஹோட்டல் தொழில் நடத்தி வருகிறார். மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள அமிக்க ஓட்டல் பத்மகுமாருடையது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நாடுமுழுவதும் நடைபெற்று வரும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு அமிக்கா ஹோட்டலில் இலங்கை வாழ் தமிழரான பத்மகுமார் 78வது சுதந்திர தின தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
மேலும் அவரது அமிக்க ஹோட்டலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பச்சை வெள்ளை, ஆரஞ் வண்ண தேசிய கொடி போல் இனிப்புகள், பழரசங்கள், கிரஸ், கேசரி போன்றவை தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர்.
பின்னர்நிர்வாகம் சார்பில் ஈச்சனோடையில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள கணினி உபகரணங்கள் வழங்கி உள்ளார்.
மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி மரக்கன்றுகளை தலைமைஆசிரியர் ராஜநாயகம், ஜெயஸ்ரீ மற்றும் ஒட்டல் நிர்வாகிகள் நட்டனர்.
மேலும் சுதந்திர தின விழாவின் கொண்டாட்டத்தை முன்னிட்டு வில்லாபுரம் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மகாத்மா முதியோர் இல்லத்தில் 30 பேருக்கு மதிய உணவு மற்றும் போர்வைகள் வழங்கினர்.
இலங்கை சேர்ந்த தொழிலதிபர் பத்மகுமார் தேசியக்கொடியை பற்றி இந்தியாவில் உள்ள குறிப்பாக தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் கல்வி நலன் மற்றும் சமூக நலன் கருதி அக்கரையுடன் செய்த செயல் பாராட்டுக்குரியது.