• Thu. Mar 28th, 2024

ஆளுநரை திரும்ப பெற கோரி வழக்கு தொடரப்படும்- ஆர்.எஸ்.பாரதி

ByA.Tamilselvan

Nov 10, 2022

குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஆளுநர் மீதுநீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இந்தி எதிர்ப்பு தீர்மானத்தை மேற்கு வங்கம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் தங்கள் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். இந்தி பேசினால் மட்டுமே எதிர்காலம் என்ற பொய் பரப்புரையை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தி பேசக்கூடிய மக்கள் தமிழகத்திற்கு அதிக அளவு வேலைக்கு வருகின்றனர். மேலும் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய சுந்தர் பிச்சை தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வி கற்று ஆங்கிலம் தெரிந்ததால் தற்போது அதிக சம்பளம் வாங்கி வருகிறார். தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவி பா.ஜ.க.காரர்களைப் போல பேசி வருகிறார். ஆளுநரை திரும்ப பெறக்கூடிய மனுவை குடியரசுத் தலைவரிடம் வழங்கி இருக்கிறோம். குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். அ.தி.மு.க. எப்போது இருந்தாலும் தி.மு.க.விற்கு பங்காளிதான், ஆனால் பா.ஜ.க. தி.மு.க.விற்கு மட்டுமல்ல நம் இனத்திற்கே பகையாளி. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *