• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பழங்கால சிலையின் கையில் லேப்டாப்..,ஆச்சர்யத்தில் மக்கள்..!

Byவிஷா

May 8, 2023

கிரேக்க காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால சிலையின் கையில் லேப்டாப் இருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பலர் சொல்வதுண்டு. ஆனால் அவர்களிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை. அவர்கள் பார்த்ததை அனுபவித்ததை வார்த்தைகளால் சொல்கிறார்கள். ஆனால் தற்போது ஒரு சிலையின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த சிலையில் ஒரு பெண் நாற்காலியில் அமர்ந்திருக்க நின்று கொண்டிருக்கும் சிறுமியின் கையில் லேப்டாப் மாதிரியான ஒன்று இருக்கிறது. இந்த சிலை பண்டைய கிரேக்க காலத்தை சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் டைம் டிராவல் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் மத்தியில் ஒருவித பீதி ஏற்பட்டுள்ளது. இந்த 37 அங்குலம் சிலை கிரேக்க காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒரு பெண் அமர்ந்திருக்க மற்ற கையில் லேப்டாப் மாதிரியான ஒன்று இருந்தது. துளைகளும் அதன் பக்கங்களில் காணப்பட்டன. இந்த சிலை தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இது உண்மையில் லேப்டாப் என்று பலர் நம்ப தொடங்கியுள்ளனர்.