பி.எம். கேர் நிதி தொடங்கப்பட்டு மூன்று வருடத்தில் 535 கோடி ரூபாய் வெளிநாட்டு பபங்களிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று பரவ தொடங்கிய புதிதில் தொடங்கப்பட்ட பி.எம்.கேர்ஸ் நிதியில் மூன்று வருடத்தில் வெளிநாட்டவர்களின் பங்களிப்பாக 535.44 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.
2019 – 2020 நிதியாண்டில் வெளிநாட்டவர்கள் அளித்த நிதி ரூபாய் 0.40 கோடி ஆகும். 2020 – 2021 நிதியாண்டில் வெளிநாட்டவர்கள் அளித்த நிதி ரூபாய் 494.92 கோடி ஆகும். 2021 – 2022 நிதியாண்டில் வெளிநாட்டவர்கள் அளித்த நிதி ரூபாய் 40.12 கோடி ஆகும்.
இதை தவிர்த்து தன்னார்வ பங்களிப்பாக மூன்று வருடத்தில் நிதி ரூபாய் 12,156.38 பெறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மூன்று வருடத்தில் பி.எம்.கேர்ஸ் நிதியில் வெளிநாட்டு பங்களிப்பு மற்றும் தன்னார்வ பங்களிப்பு சேர்த்து 12,691.82 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது.