• Thu. May 9th, 2024

நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…

Byகுமார்

Sep 30, 2023

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை கோ புதூர் பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் மதுரை மண்டலத்தின் சார்பில்காவிரி உரிமை அனைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ஜெயசீலன் தலைமையிலும், கிழக்கு மேற்கு மண்டல செயலாளர்கள் அப்பாஸ், சிவானந்தம் ஆகியோர் முன்னிலையிலும் சாட்டை துரைமுருகன் உரிமை உரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கர்நாடக அரசு, ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் சாட்டை துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது, காவிரியில் தமிழர்களுக்கான தண்ணீரை தரமறுக்கும் கர்நாடக அரசையும், அதனை வேடிக்கை பார்க்கின்ற ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியில் மதுரை மண்டலத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயர்நீதிமன்றத்தில் காவிரி நடுவர் மன்றம் 192 டி.எம்.சி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூறிய பிறகும் வினாடிக்கு 3000 கன அடி நீரை திறந்துவிடுங்கள் என கூறிய பிறகு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கூறுவது, கன்னட வெறியா, இல்லையா என்பது நாம் தமிழர் கட்சியின் கேள்வி திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆளுகின்றது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் படையலிட்டும் இறந்தவர் போல் ஒப்பாரி வைத்த வைத்தும் நாய் கழுத்தில் ஸ்டாலின் படத்தை மாட்டி இழிவு படுத்துகிறது. தமிழகத்தின் முதல்வரே இழிவுபடுத்துவது திமுகவிற்கு வலிக்கிறதே இல்லையோநாம் தமிழர் கட்சி சீமான் தம்பிகளுக்கு வலிக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி இருந்து வெளியேறாமல் பார்த்து தொடை நடுங்குகிறது. காவிரி உரிமைையை திமுக, அதிமுக மீட்காவிட்டால் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டங்களை ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மதுரையில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் போல் போராடி காவிரி உரிமையை மீட்போம் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *