• Sat. May 2nd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிப்பு..!

ByKalamegam Viswanathan

Oct 2, 2023

காந்திஜெயந்தியை முன்னிட்டு, சோழவந்தானில் காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது.
சோழவந்தான் எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவரது முழு திருவுருவச் சிலைக்கு நகர அரிமாசங்கத் தலைவர் பள்ளி தாளாளர் கவுன்சிலர்மருதுபாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் திருவுருவச் சிலைக்கும் கலைவாணி திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக காந்தி பிறந்த நாளையொட்டி பள்ளியில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் மணிமுத்தையா பள்ளி நிர்வாகி.வள்ளிமயில். ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். நிகழ்ச்சி முடிவில்,பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.