• Mon. Dec 1st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புல் செடிகள் தீப்பிடித்து எரிந்த நெருப்பில் சிக்கி காவாலாளி  பலி..! 

ByG.Suresh

Apr 1, 2025

திருப்புவனம் அருகே மடப்புரத்தை அடுத்தமஞ்சள் குடியில்  சுமார் 150ஏக்கர் பரப்பளவில் தனியார் சோலார் பிளாண்ட் உள்ளது.அந்த சோலார் பிளாண்டின் காவலாளி தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

மஞ்சள்குடியைச் சேர்ந்த சேகர் (வயது 57),  அங்குள்ள  தனியார்  சோலார் பிளாண்டில் எட்டு வருடங்களாக காவலாளியாகவேலை பார்த்து வந்தார்.  நேற்று காலை சோலார் பிளாண்ட்  வளாகத்தில் உள்ள காய்ந்து போன  புற்களுக்கு சிலர் தீ வைத்ததாகவும் அணைக்க சென்ற காவாலாளி சேகர் நெருப்பில்  சிக்கி  உயிரிழந்ததாகவும்  கூறப்படுகிறது.

தகவலறிந்து உறவினர்கள் பூவந்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பூவந்தி இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமையில் இரண்டு போலீசார் மட்டும் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடலை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றார்., அப்போது உறவினர்கள் இறப்பிற்கு காரணம், உரிய நடவடிக்கை, இழப்பீடு வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பூவந்தி இன்ஸ்பெக்டர் கலைவாணி உறவினர்களை தரக்குறைவாக பேசியதாகவும் இறந்தவர் உடலை அப்படியே போட்டு விட்டு சென்று விடுவேன் என மிரட்டியதால்  உறவினர்கள் மடப்புரத்தில் உடல் ஏற்றிய வேனை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் சமாதானம் பேசி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்ய வசதியில்லை என தெரிவித்ததையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.