சென்னை ஆலந்தூர் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் மீனம்பாக்கம் சிக்னலில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த வடபழனிலிருந்து தாம்பரம் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த 70 வி அரசு பேருந்து சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியை கவனிக்காமல் வேகமாக மோதியது. இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்ததோடு பயணிகள் அனைவரும் கூச்சலிட்டனர்.

காரணமாக மீனம்பாக்கத்தில் இருந்து ஆலந்தூர் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ள அரசு பேருந்து ஜிஎஸ்டி சாலையில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு விடுகின்றனர்.
பரபரப்பான ஜிஎஸ்டி சாலையில் காலை வேளையில் சிக்னல் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் பேருந்து ஓட்டுனர் வேகமாக வந்து மோதியதாக பயணிகள் சிலர் கூறியதால் தூக்க கலக்கத்தில் இருந்தாரா அல்லது கவன குறை இருந்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.