• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தில் திடீர் தீ விபத்து…

ByKalamegam Viswanathan

Nov 12, 2023

மதுரை செல்லூர் 50 அடி சாலையில் இயங்கி பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உள்ளே இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் பேப்பர் காலண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் ஏற்பட்டுள்ள தீ விபத்தை துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.