


சென்னையில் நடைபெற உள்ள புதிய ஓய்வூதிய திட்ட எதிர்ப்பு கோரிக்கை மாநாடு குறித்த செய்தியாளர் சந்திப்பு மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மு.செல்வக்குமார்,சு.ஜெயராஜராஜேஸ்வரன் ,பி.பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்.. திமுக-வின் தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ; வரும் 11.02.2023-இல் சென்னை, சேப்பாக்கம் ஆடம்ஸ் சாலையில் உள்ள அண்ணா அரங்கில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் ’கோரிக்கை மாநாட்டை” காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அம்மாநாட்டிற்கு மாநிலம் முழுவதிலுமிருந்து ஊழியர்கள் வர உள்ளனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாகவும், அம்மாநாடு நிகழ்வுகள் தொடர்பாக இன்று 28.01.2023 பிற்பகல் செய்தியாளர் சந்திப்பு மதுரை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்க கட்டடத்தில் நடை பெற்றது.

