மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட 2வது மற்றும் 3வது நபர்களான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். மேலும் தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.