• Sun. Mar 16th, 2025

மாரடைப்பு… வகுப்பறையிலேயே உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவி

ByA.Tamilselvan

Jan 28, 2023

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் 11-ம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட்டு வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி விரிந்தா திரிபாதி (16). இவர், அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த புதன்கிழமை அன்று தனது பள்ளிக்கு வழக்கம் போல சென்றார். அங்கு குடியரசு தின விழா ஒத்திகை நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற விரிந்தா, ஒத்திகை முடிந்து வகுப்பு சென்றார். இந்த நிலையில், சுமார் 12 மணி அளவில் திடீரென மயங்கி சரிந்து விழுந்தார். பதறிப்போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை தூக்கிக்கொண்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். மாரடைப்பு ஏற்பட்டதே மாணவியின் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். .