• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் விடுமுறையா? அமைச்சர் பதில்

ByA.Tamilselvan

Oct 22, 2022

தீபாவளி பண்டிகைக்கு மறுநால் விடுமுறை என்றகேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலாளித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்திருந்த அமைச்சர் செய்தியாளர்களிடம் – தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமையும் சேர்த்து விடுமுறை அளிப்பது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள். இந்த விடுமுறையானது பள்ளி கல்வித்துறைக்கு மட்டுமின்றி தமிழக அரசின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். எனவே இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார். செவ்வாய்க்கிழமை விடுமுறை குறித்து கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் அலுவலகத்தில் கலந்து ஆலோசித்து முடிவு வெளியிட இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.