• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

குற்றாலத்தில் அலைமோதும் கூட்டம்..!

Byவிஷா

Jul 26, 2023

குற்றாலத்தில் சாரல் காற்றுடன் மழை பெய்து வருவதால், அங்கு சீசன் களைகட்டியுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் கடுமையான வெயில் கொளுத்திய நிலையில், இந்த மாதம் தொடக்கம் முதலே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. காற்று மாறுபாடு காரணமாக பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருவதால், பொதுமக்கள் நிமம்மதி பெருமூச்சு அடைந்துள்ளது. இதற்கிடையில், கேரள, கர்நாடக மாநிலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால், .மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள தென்காசி மாவட்டம் குற்றாலத்திலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், குற்றாலத்தை நோக்கி சுற்றுலாப் பயணிகளின் படையெடுத்து வருகின்றனர். நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, பாலருவி, பழைய குற்றாலம் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. காவல் துறையினர் சார்பில் தடுப்புகளை அமைத்து சுற்றுலாப் பயணிகளை வரிசையில் காத்திருந்து குளிக்க அனுமதிக்கின்றனர். அவ்வப்போது பெய்யும் சாரல் மழைத்துளிகளால் நகரெங்கும் ரம்மியான சூழல் நிலவுகிறது. குற்றால சீசன் களை கட்ட துவங்கியுள்ளதால் நாட்கள் செல்ல, செல்ல சுற்றுலாப் பயணிகளின் வருகை வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.