• Tue. Mar 31st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மூத்த தம்பதியினருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Feb 10, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இன்று 70 வயது நிரம்பிய மூத்த தம்பதியினர் 30 பேருக்கு மங்களப் பொருள் வழங்கி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை அறிவிப்பு 2025-26ன் படி தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோவில்களில் 70 வயது நிரம்பிய மூத்த தம்பதியினருக்கு வேஷ்டி சட்டை சேலையுடன் மங்களப் பொருட்கள் வழங்கும் மாலை அணிவித்து மரியாதை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பரம்பரை அரங்காவலர் குழு பூசாரி ராமமூர்த்தி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

70 வயது நிரம்பிய 30 மூத்த தம்பதியினர்கள் அழைத்து அவர்களுக்கு கோவில் கொழுமண்டபத்தில் வேஷ்டி சட்டை சேலை அடங்கிய மங்களப் பொருட்கள் வழங்கிய அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கலந்து கொண்ட தம்பதியினரிடம் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆசிர்வாதம் வாங்கிச் சென்றனர். மூத்த தம்பதியினர் மாலை மாற்றிக்கொண்டு செல்போன் செல்பி எடுக்கும் மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் இருக்கன்குடி காவல் ஆய்வாளர் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் அலுவலர்கள் என பல கலந்து கொண்டனர்.