• Fri. Jun 26th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் விழா..,

BySeenu

Jun 26, 2026

கோவை சோமையனூர் விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் ஆண்டு தோறும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தங்கள் மற்றும் புத்தக்கப்பை வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் 20வது ஆண்டாக நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று நஞ்சுண்டாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் மற்றும் விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சேர்மன் விகேவி சுந்தரராஜ் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு நோட்டுபுத்தகங்கள், புத்தகப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து இறுதியாக சோமையனூரில் நடைபெற்ற விழாவில் சோமையனூர் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு நோட்டுபுத்தகங்கள், புத்தகப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நஞ்சுண்டாபுரம் ஊராட்சிகுட்பட்ட அரசு பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதில் பாப்பநாயக்கன்பாளையம் நடுநிலைப்பள்ளியில் 220 மாணவ, மாணவிகளுக்கும், ராமநாதபுரம் தொடக்கப்பள்ளியில் 110 மாணவ, மாணவிகளுக்கும், வரப்பாளையம் தொடக்கப்பள்ளியில் 75 மாணவ, மாணவிகளுக்கும், 22.நஞ்சுண்டாபுரம் தொடக்கப்பள்ளியில் 80 மாணவ, மாணவிகளுக்கும், உஜ்ஜையனூர் தொடக்கப்பள்ளியில் 180 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் சோமையனூர் நடுநிலைப்பள்ளியில் 350 மாணவ, மாணவிகளுக்கும் சுமார் 8 லட்சம் மதிப்பில் நோட்டுபுத்தகங்கள், புத்தகப்பைகள் வழங்கப்பட்டது.

இதில் விகேவி குரூப்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ் வினீஸ், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தர்ராஜ், ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் உறுப்பினர்கள் சோமசுந்தரம், குமாரசாமி, நாகராஜ், ஆறுமுகம், புஷ்பலதா, வேணி, ஆனந்த், இந்திராணி, சவிதா, மணிவாசகம், ஆசிரியர் சின்ராஜ் ஓய்வு, ஜெயக்குமார், ஊர் முக்கியஸ்தர்கள், முன்னள் ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன், முன்னாள் துணைத் தலைவர் மகேஸ்வரன், பேருந்து மேலாளர் அருண்குமார், விகேவி குரூப்ஸ் ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர். தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.