• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

தூய்மை பணியாளர்களை ஜாதி பெயரை சொல்லி திட்டிய பேரூராட்சி துணை தலைவர் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு.

ByJeisriRam

Jun 11, 2024

மு க ஸ்டாலினோ, தேனி மாவட்ட கலெக்டரோ, நீ போய் புகார் தெரிவித்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.., என்று பேசிவிட்டு ஜாதி பெயரை சொல்லி திட்டிய தேவதானப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவாகியுள்ளது தான் ஹாட் டாபிக்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி தூய்மை பணியாளர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் சாலை அமைக்கும் பொழுது குடிநீர் குழாய் உடைக்கப்பட்டது.

இதனால் தூய்மை பணியாளர்கள் வசிக்கக்கூடிய பகுதியை சேர்ந்தவர்கள் தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் புகார் தெரிவிக்க சென்றனர்.

அப்பொழுது பேரூராட்சி துணைத் தலைவர் நிபந்தன், தூய்மை பணியாளர்களை ஜாதியை சொல்லி திட்டியும் மு க ஸ்டாலினோ, தேனி மாவட்ட கலெக்டரோ, நீ போய் புகார் தெரிவித்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

இது குறித்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 கீழ் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் அறிவழகன் புகார் தெரிவித்தார்.

வழக்குப் பதிவு செய்யாத காரணத்தால் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் உரிய ஆதாரங்களுடன் இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் மாநிலத் துணைச் செயலாளர் ஜெகநாதன் மூலம் சென்னை சென்று அறிவழகன் புகார் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று தேவதானப்பட்டி காவல்துறையினர் துணைத்தலைவர் நிபந்தன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.