• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

ByP.Thangapandi

Jan 23, 2025

உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புதுப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன் – விஜயலட்சுமி தம்பதி, விவசாய கூலி தொழிலாளியான பாலமுருகன், வைக்கோல் வியாபாரமும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

வைக்கோல் வியாபாரத்திற்காக சில்லாம்பட்டி விலக்கு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டின் எதிரே உள்ள கடைக்கு தம்பதி இருவரும் சென்றுவிட்டு சாலையை கடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.

சாலையை கடக்க முயன்ற இந்த தம்பதி மீது உசிலம்பட்டியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது, இதில் மனைவி விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கணவர் பாலமுருகன் படுகாயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விஜயலட்சுமி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.