• Tue. Apr 30th, 2024

சேற்றில் பள்ளத்தில் சிக்கிய கார்..,

ByKalamegam Viswanathan

Nov 3, 2023

அரைகுறையாக வேலை சேற்றில் பள்ளத்தில் சிக்கிய கார் ஒரு மணி நேரம் போராடி பொதுமக்கள் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 70 வது வார்டு நேரு நகர், நேதாஜி நகர் மெயின் ரோடு பகுதியில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டது. இதில் இன்று மழை பெய்யும் நேரங்களில் சாலையானது சேரும் சகதியாக மாறிவிடுகிறது. இன்று மாலை ஒரு கார் ஒன்று சிக்கி மீட்க முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதி மக்கள் ஒன்று கூடி அந்த காரை மீட்டனர்.
தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான பகுதிகளில் பள்ளங்களை முறைப்படி மூடி சாலையை சரி செய்து வருகின்றனர். மாநகராட்சி பகுதிகளில் தோண்டப்படும் பள்ளங்களை சரிவர மூடாமல் உள்ளனர். பலமுறை ஒப்பந்ததாரர்களும் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சொல்லியும் எந்தவிதமான நடவடிக்கையும் அலட்சிய போக்குடன் செயல்பட்டு எடுக்கப்படவில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி சேற்றில் பலர் கீழே விழுந்து படுகாயங்கள் ஏற்படுவது உடன் கார் உள்ளிட்ட வாகனங்கள் சுமார் இரண்டு அடி அல்லது மூன்று அடி பள்ளத்திற்கு வரை சென்று மாட்டிக் கொள்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மழைக்காலங்களில் பள்ளங்களை சரிபட மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர். உடனடியாக தோண்டப்பட்ட பள்ளங்களில் முறைப்படி சிமெண்ட் கலவைகள் கொண்டு சாலைகளை சரி செய்ய வேண்டும் என்பது அனைவரிடமும் கோரிக்கையாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் நிறுவனம் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *