பல்லடம் கணபதிபாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் சேர்ந்தவர் முருகேசன்.
இவர் அங்குள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இதனிடையே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஆல்டோ 800 கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 12 மணியளவில் காரின் முன் பகுதியில் இருந்து கருப்பொகை வெளியேற தொடங்கியது. மேலும் சிறிது நேரத்திலேயே கார் மலைவென தீ பற்றி எரியத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருப்பூர் தெற்கு தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். மேலும் காரானது முழுவதுமாக தீக்கு இறையானது. மேலும் இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.