• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம்

Byவிஷா

Feb 7, 2024

குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும், பிங்க் நிறத்தில் விற்கப்படுகின்ற பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனம் கலக்கப்படுவதை உணவுப் பாதுகாப்புத்துறையினர் உறுதி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு பொருளாக பஞ்சு மிட்டாய் உள்ளது. குழந்தைகள் விரும்பி ரசித்து சாப்பிடுவார்கள். குழந்தைகள் கேட்டு அடம் பிடிக்கும்போது பெற்றோர்களும் வாங்கி கொடுத்து விடுவார்கள். இந்நிலையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக புதுச்சேரி கடற்கரை பகுதி மற்றும் சுற்றுலா தலங்களில் விற்கப்படும் ’பிங்க்’ நிற பஞ்சு மிட்டாயில், புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதை உணவு பாதுகாப்பு துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர். இவ்வகை பஞ்சு மிட்டாயை விற்கும் 30க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை தேடி வருகின்றனர்.