• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய சிறுவன்..!

BySeenu

Jun 23, 2026

கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் அரங்கேறிய அந்த அதிர்ச்சி விபத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, அதிசய ஏற்படுத்தி உள்ளது.

லைசென்ஸ் கூட இல்லாத வயதில், அஜாக்கிரதையாக டூ-வீலரை இயக்கி வந்த சிறுவன் ஒருவன், முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்திச் செல்ல முயன்று உள்ளான். எதிர்பாராத விதமாக வளைவில் திரும்பும் போது நிலைதடுமாறி, அந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே தடாலடியாகக் கவிழ்ந்தது.

நல்வாய்ப்பாக வண்டியை ஓட்டிய சிறுவன் இடதுபுறம் விழ, பின்னால் அமர்ந்து இருந்த மற்றொரு சிறுவன் பேருந்தின் பின் சக்கரத்திற்கு நேர் கீழே விழுந்து, நொடிப் பொழுதில் கொடூர விபத்தில் சிக்கினான். நம்பவே முடியாத அந்தப் பகீர் நொடியில், அரசுப் பேருந்தின் பின் சக்கரம் அந்த சிறுவனின் இடுப்புப் பகுதியில் ஏறி இறங்கியது.

அந்த சிறுவன் சாலையில் படுத்து உயிருக்கு போராடிய இந்த பதைபதைக்கும் நேரடி விபத்துக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.