• Thu. Apr 25th, 2024

மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக நிதி திரட்டும் 61 வயது மாரத்தான் வீரர்

Byகாயத்ரி

Nov 22, 2021

மகாராஷ்டிராவில் உள்ள பழங்குடியினர் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கும் மாற்றுத் திறனாளி ராணுவ வீரர்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளிப்பதற்கும் நிதி திரட்டுவதற்காக 61 வயதான அஜ்வானி குமார் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கியுள்ளார்.


கடந்த 19-ம் தேதி காஷ்மீரின் பாட்னிடாப்பில் இருந்து ஓட்டத்தை தொடங்கிய அஜ்வானி குமார், அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்கிறார். 4,444 கி.மீ. தூரத்தை 77 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளார். அஜ்வானி குமார், ஓட்டப்பந்தய வீரர்களின் குழுவால் தொடங்கப்பட்ட எஃப்ஏபி அறக்கட்டளையின் நிறுவனர்-இயக்குநர் ஆவார். இந்தக் குழுவினர் ஓடுவதில் உள்ள ஆர்வத்தையும் சமூகத்திற்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தையும் ஒருங்கிணைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அஜ்வானி குமார் சமூக காரணங்களுக்காக பல நகரங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மராத்தான்களை நடத்தியுள்ளார். இதன்மூலம் திரட்டப்பட்ட நிதியை ஏழைகளுக்கு வழங்கி வருகிறார்.இதுகுறித்து அஜ்வானி குமார் கூறும்போது, “நாங்கள் சில காரணங்களுக்காக ஓடுகிறோம். 100 சதவீத பணத்தை பெறவேண்டும் என்பதே எங்கள் முக்கிய நோக்கம். இப்போது நாங்கள் பழங்குடியினர் பள்ளிகளை மேம்படுத்த முயற்சிக்கிறோம். ஒரு குடிமகனாக, எங்கள் குழு ராணுவத்திற்கு ஏதாவது செய்ய விரும்புகிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *