• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமித்ஷாவை சந்திக்கும் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ்

ByA.Tamilselvan

Nov 12, 2022

சென்னை வரும் அமித்ஷாவை ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திக்க இருப்பாதாக தகவல்வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னையில் நடைபெறும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார். திண்டுக்கல்லில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடியை ஈபிஸ் மற்றும் ஓபிஎஸ் சந்தித்தனர். தொடர்ந்து இன்று அமித்ஷாவையும் இருவரும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இன்று சந்திக்க இருப்பது உறுதியாகி உள்ளது.