• Mon. Dec 22nd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

10% இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தநிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க சட்டமன்ற கட்சித்தலைவர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. 10% இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.