• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கேப்டன் ரோகித் சர்மாவுக்கு படுகாயம்

ByA.Tamilselvan

Nov 8, 2022

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பயிற்சியின் போது வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அரையிறுதியில் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சிட்னியில் நாளை (நவ. 9) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
மற்றொரு அரை இறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி நாளை மறுதினம் (நவ. 10) அடிலெய்டில் எதிர்கொள்கிறது. அரையிறுதி போட்டிக்கு தயாராவதற்கு இந்திய அணி வீரர்கள் அடிலெய்டில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரம் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா பின்னர் தனது பயிற்சியை தொடங்கினார். இதனால் கேப்டன் ரோகித்துக்கு ஏற்பட்ட காயம் அரையிறுதி போட்டியில் விளையாட பாதிப்பை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.